http://WWW.ASWINSSWEETS.CO.IN
ASWINSSWEETS 584a4b4927b36009d82b489d False 9 13
OK
background image not found
Updates
update image not found
கொத்துமல்லி தனியா மல்லி காபியை குடித்து வந்தால் உண்டாகும் பயன்கள்.. மல்லி என்றதும் கீரையா? விதையா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இரண்டுமே பயனுள்ளதுதான் என்றாலும், இந்தக் கட்டுரை பார்க்கப் போவது கொத்துமல்லி விதையைப் பற்றித்தான். அகட்டுவாய்வகற்றி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இந்த தனியா விதை, தரும் மருத்துவ குணங்கள் அலாதி. அது என்ன அகட்டுவாய்வகற்றி? அகடு என்றால் வயிறு. வயிற்றின் வாயுவை அகற்றும் பணியைச் செயவதால் அதற்கு அந்த காரணப் பெயர். “தனியா”- ஒரு மிகச் சிறந்த வாய்வு நீக்கும் பொருள். கிழங்கு, புலால், எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிட்டு வாய்வு தொந்தரவு ஏற்பட்டாலோ, வயிற்றுப்புண் நோயில் செரிமனம் ஆகாமல், உணவு எதுக்களித்து செரியாமையும் வாயுவும் ஏற்பட்டாலோ தனியா தவிர்க்க முடியாத கைகண்ட மருந்து. வெறும் தனியா என்பது சோடா சமாச்சாரம் மட்டுமா? என்றால், அதையும் தாண்டி மகத்துவமானது. மல்லிவிதை உலகின் மிகப் பழமையான மருத்துவ குணமுள்ள மணமூட்டி. கிறிஸ்து பிறப்பிற்கு 7000 ஆண்டுகளுக்கு முந்தைய நியோலித்திக் அக்ழ்வாய்விலும், பழம் கிரேக்கத்திலும், பின்னர் பைபிளிலும் பேசப்பட்ட மூலிகை கொத்துமல்லி. சித்த மருத்துவமும் சீன மருத்துமும் அதிகம் பயன்படுத்திய விதைகளுள் இதுவும் ஒன்று. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களில் மல்லி சித்த ஆயுர்வேத மருந்துகளில் இன்றளவும் பயன்படுகிறது. தனியாவில் கிட்டத்த்ட்ட 85 விதமான் மணமூட்டும் எண்ணெய்கள் உள்ளன. அவற்றில் 26 வகை எண்ணெய்கள் மருத்துவ குணமுள்ளவை. அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல்... பெரம்பலூர். திருச்சி. மற்றும் சென்னை..
Tags:
+
http://WWW.ASWINSSWEETS.CO.IN/-/b3
2 3
false